» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணி : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!
வியாழன் 10, ஜூலை 2025 7:23:07 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழாவில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 07.07.2025 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 06.07.2025 மாலை முதல் 07.07.2025 இரவு வரை பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் கும்பாபிஷேக விழா அமைதியாக நடத்தியதற்காக சுமார் 6,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.மேற்படி கும்பாபிஷேக விழாவில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள்ஆறுமுகம், தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், போக்குவரத்து பிரிவு காவல்துறையினர், தனிப்பிரிவு காவல்துறையினர், தொழில்நுட்ப பிரிவு காவல்துறையினர் ஆகியோரை வாழ்த்தி பாராட்டினார்.
மேலும், இந்த மகத்தான நிகழ்வை சிறப்பாக நடத்துவதில் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பக்தர்கள், பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கும் தமிழ்நாடு காவல்துறை தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










