» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்!!

செவ்வாய் 8, ஜூலை 2025 8:21:27 PM (IST)



சாயர்புரம் செபத்தையாபுரம் அரிமா சங்கத்தின் 2025 - 2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தூத்துக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் எஸ்விபிஎஸ் மஹாலில் நடந்தது

விழாவிற்கு சங்கத் தலைவர் கோதண்டராமன் தலைமை வகித்தார். முன்னாள் கவர்னர் டாக்டர் ஷாஜஹான் அமைச்சரவை அலுவலர்கள் வனமூர்த்தி, ராஜேஷ், சுப்பையா, ஆறுமுகசாமி, ஶ்ரீனிவாசன் ஆலயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தரசன் கொடி வணக்கம் வாசித்தார். நல்லாசிரியர் ஞானராஜ் அரிமா சங்க வழிபாட்டை நடத்தினார். உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. 

அரிமா சங்க செயலாளர் செல்வ பிரகாஷ் வருடாந்திர சேவைத்திட்ட அறிக்கை அளித்தார். விழாவில் சாயர்புரம் செபத்தையாபுரம் அரிமா சங்கதலைவராக எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், செயலாளராக விஜய சிவா, பொருளாளராக பாஸ்கர் உள்பட அனைத்து புதிய நிர்வாகிகளுக்கு முன்னாள் கவர்னர் விஸ்வநாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். செபத்தையாபுரம் சக்திவேல் சேர்வைக்காரன்மடம் பிளெஸ்ஸிங் சாமுலேல் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். 

விழாவில் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி, தூய மேரி மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிவத்தையாபுரம் அருள்மிகு முத்து மாலையம்மன் இந்து மேல்நிலைப் பள்ளிகளில் 10வது மற்றும் 12வது வகுப்பு அரசுத் தேர்வுகளில் முதல் இரு மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியரை கௌரவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் 20 பேருக்கு கல்வி உதவித் தொகையும் சாயர்புரம் இம்மானுவேல் டிரஸ்ட் குழந்தைகள் நல மையத்திற்கு நிதியுதவி, சலவை தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory