» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித மலையப்பர் ஆலய திருவிழா சப்பரபவனி : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திங்கள் 7, ஜூலை 2025 8:20:32 PM (IST)

பேய்க்குளம் புனித மலையப்பர் என்ற தோமையார் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் தோமையார்புரம் புனித மலையப்பர் என்ற தோமையார் ஆலய திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. இத் திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் திருப்பலி மறையுறை ஜெபமாலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
9ம் நாளான ஜூலை 5ஆம் தேதி காலை சவேரியார் புரம் பங்குதந்தை பிராக்ரஸ் தலைமையில் ஜெபமாலை, புனிதரின் பிரார்த்தனை, திருப்பலியும், மாலை சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிகுலேஷன் பள்ளி அருள் தந்தை ரூபட் தலைமையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மறையுறை வழங்கினார். தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடந்தது.
10ம் நாளான 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை தென் மண்டல பொறுப்பருள் தந்தை வெனி இளங் குமரன் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, ஜெபமாலை புனிதரின் பிரார்த்தனை நடைபெற்றது. அருள் தந்தை பெப்பி மறையுறை வழங்கினார். தொடர்ந்து புனிதரின் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை கொடி யிறக்கம், நற்கருணை ஆசீர், மற்றும் பங்குத்தந்தை சந்திப்பு நன்றி நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிராக்ரஸ் தலைமையில் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










