» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
திங்கள் 7, ஜூலை 2025 5:26:58 PM (IST)

விளாத்திகுளத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் கடந்த 2024-2025 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற மோனிகா, யாழினி சோபியா, பவித்ரா, 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பிரதீபா, அரிகரன், முத்துமனிஷா ஆகியோருக்கு தேவேந்திர குல வேளாளர் நல சங்கம் சார்பாக பரிசுத்தொகையாக ரூ.15,000, ரூ.12,000 மற்றும் ரூ.10,000 வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சென்னை ரிசர்வ் வங்கி உதவிப் பொது மேலாளர் அன்பரசு, விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்தி ராமச்சந்திரன், தொழிலதிபர் ரஞ்சித் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குருநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு மற்றும் கற்பகம் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










