» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அழகுநிலையம் உட்பட 2 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை
ஞாயிறு 6, ஜூலை 2025 11:03:22 AM (IST)
தூத்துக்குடியில் அழகுநிலையம் உட்பட 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி முள்ளக்காடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்துரை (56). இவர் முத்தையாபுரம் தோப்பு தெரு பகுதியில் பெயிண்டு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம்போல் அடைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.7 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
அதுபோல் முத்தையாபுரம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சிலம்பு ஒளி (42). இவரும் அதே பகுதியில் அழகு நிலையம் வைத்துள்ளார். அவருடைய கடையின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து அங்கிருந்த ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து 2 பேரும் தனித்தனியாக முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










