» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடமுழுக்கை தமிழில் நடத்தவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம்: வியனரசு பேட்டி

ஞாயிறு 6, ஜூலை 2025 8:57:59 AM (IST)



திருச்செந்தூர் திருக்கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ.வியனரசு கூறினார்.

இது தொடர்பாக தூத்துக்குடியில் அவர் அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அருளாளர்களாலும் நாடாண்ட தமிழ் மன்னர்களாலும் உருவாக்கப்பட்டவை. நம்முடைய பழந்தமிழ் நாகரிகமும் பண்பாடும் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு தோன்றியவைகள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய திருக்கோயில்களின் வழிபாடுகளையும் குடமுலுக்கு  உள்ளிட்ட நிகழ்வுகளையும் அன்னை மொழியாம் தெய்வத் தமிழிலே நடத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் நெடுங்கால விருப்பமாகும்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தேன். அப்போது நீதியரசர்கள் எஸ் எம் சுப்பிரமணியன், மரியகிளாட் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதியரசர்கள் சமஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாகத் தமிழைப் பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும், சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் வித்தியாசமான நிலை இல்லாமல் சமநிலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

திருச்செந்தூர் திருமுருகன் திருக்கோயில் குடமுழுக்கு வழிபாட்டை இந்து சமய அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவாறு தமிழ் வடமொழி இருமொழியிலும் வேறுபாடு இல்லாதவாறு மந்திரங்கள் ஓதி வழிபாடு நிகழ்வு நடத்த வேண்டும் என்றார். இதைக் கண்காணிக்க ஒரு குழு அமைக்கக்கோரிய எமது கோரிக்கைக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முறையீடுங்கள் என நீதியரசர்கள் கூறினார்கள். 

அப்படி ஆணையரிடம் முறையிடவும் ஆணையர் அதை ஆய்ந்து கண்காணிப்பு குழு அமைக்கவும் போதிய காலம் இல்லாததால் நாங்களே குடமுழுக்கு நிகழ்வு முழுவதையும் கண்காணித்து நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, இந்து சமய அறநிலைத்துறை குடமுழுக்கு நிகழ்வுகளில் மாற்றம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். 

ஆகவே தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக கவனம் செலுத்தி குடமுழுத்து வழிபாடு தமிழில் நடத்த வேண்டும், தேவையானால் நமது மாவட்ட அமைச்சர் பெருமக்களான அணிதா இராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மற்றும் நா.ம.உ.கனிமொழி இணைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அவசர கவனத்திற்குக் கொண்டு சென்று ஆவண செய்ய வேண்டும். 

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா வழிபாட்டை முன்னிட்டு, நெல்லையில் நெல்லையப்பர் கோயில் தேரோட்ட நாளில் முழு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது போல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் என அனைத்து துறைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்க அறிவிப்பு செய்ய வேண்டும். தமிழக நாட்டுப்புற கலைகளை மட்டுமே குடமுழுக்கு விழாவில் பயன்படுத்தப்பட வேண்டும் மாற்று மாநிலக் கலைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றார். பேட்டியின் போது, தமிழ்நாடு மக்கள் இயக்க மாநில தலைவர் காந்தி மள்ளர் உடன் இருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital




Thoothukudi Business Directory