» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்பட வேண்டும்: சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு நீதிபதி கே.சந்துரு அறிவுரை

சனி 5, ஜூலை 2025 4:50:10 PM (IST)



சட்டக் கல்லூரி மாணவர்கள் அன்றாட வாழ்க்கையில் அரசியலமைப்பு  சட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. அதன்படி செயல்பட வேண்டும் என்று மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு பேசினார்.

தூத்துக்குடியில் "குன்றென நிமிர்ந்துநில்" என்ற தலைப்பில் சட்டம் பயிலும் மாணவ, மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கனிமொழி எம்பி, அமைச்சர்  பி.கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில், மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கலந்து கொண்டு பேசுகையில், "தூத்துக்குடி நகரத்தின் மற்றொரு பெயர் முத்து நகரம். இந்த முத்து நகரத்தின் சொத்து என்று குறிப்பிட்டால் வ.உ.சிதம்பரனார். சுதந்திர போராட்டத்தில் போராடிய வீரர் ஆவார். 

வழக்கறிஞர்கள் என்றால் போராட்டக்காரர்கள். மகாத்மா காந்தி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறைச் சாலை சென்றனர். பல்வேறு போராட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் ஆவார். வழக்கறிஞர்களாக இருந்தால் சொந்த வாழ்க்கைக்காக போராடாமல், தேசத்திற்காக போராட வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். எனவே, மாணவர்களாகிய நீங்கள் சட்டம் மற்றும் அரசியலமைப்பு குறித்து கற்றுக் கொள்வீர்கள். 

அன்றாட வாழ்க்கையில் அரசியமைப்பு சட்டத்தை கையில் வைத்துக் கொள்வது நல்லது. மேலும், அதன்படி செயல்பட வேண்டும். 1862 ஆம் ஆண்டில் பம்பாய், கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. 1925 ஆம் ஆண்டு வழக்கறிஞர்களுக்கான சட்டம் இயற்றப்பட்டது. மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உங்கள் திறமைகளை கண்டறிந்து புதிதாக கல்வி படிப்புகளை மேற்கொள்வதற்கு ஆலோசகர்கள் உள்ளனர். ஒரு நல்ல வழக்கறிஞர் என்பவர் அச்சமில்லாதவராகவும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். 

ஒரு நலிவுற்ற சமுதாயத்தில் உள்ள குடிமகனுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் உரிமையை பெற்று வழங்கக் கூடியவராக இருக்க வேண்டும். எந்த படிப்பாக இருந்தாலும் நாம் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். 1976 ஆம் ஆண்டு 39 (ஏ) என்ற சட்ட பிரிவில் ஏழைகளுக்கு சட்ட உதவி என்ற பிரிவு உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் சட்டத்தை புரிந்துக் கொண்டு, அதனடிப்படையில் சட்டப்பணியை ஆற்ற வேண்டும். 

மக்களின் உரிமைக்காக போராட வேண்டும். சட்டத்தை புரிந்துக் கொண்டு சாதாரண மக்களுக்கு பயனுள்ள வகையில் பணியாற்ற வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் சட்டத்தின் வரலாறு என அனைத்து கூறுகளையும் புரிந்து படிக்க வேண்டும். அரசியலமைப்பு நிர்ணய சபையில் அரசியலமைப்பு சட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு 26.11.1949 அன்று அங்கீகரிக்கப்பட்டது. 

இத்தினத்தை வழக்கறிஞர்கள் சட்ட தினமாக அனுசரிக்கின்றனர். பின்னர் ஒன்றிய அரசு அரசியலமைப்பு சட்ட தினம் என்று அறிவித்து அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை விதிகள் சமூக மாற்றத்தை நோக்கி நகர வேண்டும். 16வது விதியில் அனைவரும் சமம் என்று குறிப்பிடுகிறது. 

அரசியலமைப்பின் முதல் பக்கத்தில் முகவுரை என்று பகுதி உள்ளது. படித்தவர்கள் இந்த சட்டத்தை பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். மதசார்பின்மை என்பது அடிப்படையான கட்டமைப்பு. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மாற்ற முடியாது. சட்டத்தை அனைவரும் கற்றுக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory