» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கும்பாபிஷே விழா : போக்குவரத்து மாற்றங்கள் - வழித்தடங்கள் அறிவிப்பு!
சனி 5, ஜூலை 2025 12:26:03 PM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷே விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு 07.07.2025ம் தேதி காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாட்களான 06.07.2025 மற்றும் 07.07.2025 ஆகிய இரண்டு நாட்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பக்கதர்களின் பாதுகாப்பு வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்து மாற்றம் வாகன நிறுத்தும் இடங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.
பொது போக்குவரத்து மாற்று வழித்தடங்கள் (Diversion Route)
1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி, மார்க்கமாக திருச்செந்தூரை கடந்து குலசேகரபட்டிணம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் ஆறுமுகநேரி DCW Jn திருநெல்வேலி ரோடு நல்லூர் V Jn ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி/உடன்குடி வழியாக செல்லவும். அல்லது ஆறுமுகநேரி பஜார், மூலக்கரை, அம்மன்புரம் ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி/உடன்குடி வழியாக செல்லவும். அல்லது சண்முகபுரம் ரயில்வே கேட், ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி/உடன்குடி வழியாக செல்லவும்.
2. குரும்பூர் மார்க்கத்திலிருந்து திருச்செந்தூரை கடந்து குலசேகரபட்டிணம், உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்களும், அதே போல் திருச்செந்தூரை கடந்து உடன்குடி, திசையன்விளை, சாத்தான்குளம் வழியாக நாகர்கோவில் செல்லும் வாகனங்களும் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் திருநெல்வேலி ரோடு நல்லூர் V Jn ராணிமஹாராஜபுரம், காந்திபுரம், காயாமொழி, பரமன்குறிச்சி/உடன்குடி வழியாக செல்லவும்.
3. கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் குலசேகரபட்டிணம், உடன்குடி, பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் V Jn வழியாக செல்லவும்.
அல்லது ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம், நடுநாலு மூலைக்கிணறு விலக்கு வழியாக திருநெல்வேலி ரோடு காந்திபுரம், ராணிமஹாராஜபுரம் வந்து திருநெல்வேலி ரோடு நல்லூர் V Jn வழியாக திருநெல்வேலி/தூத்துக்குடி செல்லவும்.
4. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், வழியாக திருச்செந்தூரை கடந்து ஆறுமுகநேரி, தூத்துக்குடி அல்லது குரும்பூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் திருச்செந்தூரை கடந்து செல்ல முடியாதபட்சத்தில் அவைகள் பரமன்குறிச்சி, காயாமொழி, காந்திபுரம், ராணிமஹாராஜபுரம், திருநெல்வேலி ரோடு நல்லூர் V Jn வழியாக திருநெல்வேலி/தூத்துக்குடி செல்லவும்.
அரசு சிறப்பு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையம் சம்மந்தமான விபரங்கள்.
1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தின் எதிர்புறம் தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கோவிலுக்கு அருகில் செல்ல சுற்றுப்பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (circular/shuttle bus) மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம், GH backside மெயின் ஆர்ச் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் செல்லவும்.
2. திருநெல்வேலி, குரும்பூர் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் திருநெல்வேலி ரோட்டில் உள்ள ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (circular/shuttle bus) மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முத்தாரம்மன் கோவில், முருகாமடம், GH backside, வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவும்.
3. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம், பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் மற்றும் கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் வழியாக திருச்செந்தூர் வரும் அரசு சிறப்பு பேருந்துகள் அனைத்தும் பரமன்குறிச்சி சாலையிலுள்ள FCI குடோனுக்கு மேற்கு பகுதியில் (சர்வோதயா அருகில்) அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தி, திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சுற்றுப்பேருந்து (Circular Shuttle/Bus) முருகாமடம், புர் டீயஉம ளுனைந, மெயின் ஆர்ச், இரும்பு ஆர்ச், வடக்கு ரதவீதி, கீழரதவீதி, அமலிநகர் ஜங்ஷனில் பக்தர்களை இறக்கிவிட்டு, திரும்பி செல்லும் போது தெற்கு ரதவீதி, முருகாமடம் வழியாக தற்காலிக பேருந்து நிலையம் வரவும்.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனகள் வந்து செல்லும் வழித்தடம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடம் சம்மந்தமான விபரங்கள்.
பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூத்துக்குடி சாலையில் 6 வாகன நிறுத்தங்களும், திருநெல்வேலி சாலையில் 5 வாகன நிறுத்தங்களும், பரமன்குறிச்சி சாலையில் 3 வாகன நிறுத்தங்களும், திருச்செந்தூர் TB சாலையில் 3 வாகன நிறுத்தங்களும், பகத்சிங் பேருந்து நிலையத்தில் 1 வாகன நிறுத்தமும், மற்றும் புதிய நகராட்சி அலுவலகம் அருகில் 1 வாகன நிறுத்தமும் சேர்த்து மொத்தம் 19 வாகன நிறுத்தங்களும் (Parking Places), சில இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமலும், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில் (Parking) ஏனோ, தானோவென்று வாகனங்களை நிறுத்தாமல், காவலர்கள் குறிப்பிடும் இடத்தில் வரிசையாக நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
1. தூத்துக்குடி, ஆறுமுகநேரி சாலை மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
தூத்துக்குடி, ஆறுமுகநேரி மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் தூத்துக்குடி சாலையில் உள்ள ராஜ்கண்ணா நகர் வழியாக JJ.நகர் வாகன நிறுத்தம், ஆதித்தனார் கல்லூரி மாணவர் விடுதி எதிரே உள்ள வாகன நிறுத்தம், அரசு தொழிற் பயிற்சி பள்ளி (ITI) வளாகம் பின்புறம் வாகன நிறுத்தம், அரசு தொழிற் பயிற்சி பள்ளி (ITI) எதிர்புறம் வாகன நிறுத்தம் மற்றும் பிரசாத்நகர் ரோடு IMA மஹால் அருகிலுள்ள வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும், திரும்பிச் செல்லும் போது வீரபாண்டியபட்டிணம், காயல்பட்டிணம் தாயம்பள்ளி, காயல்பட்டிணம் பேருந்து நிலையம், காயல்பட்டிணம் ICICI பேங்க் Cornor, ஆறுமுகநேரி Coastal checkpost வழியாக செல்லவும்.
2. திருநெல்வேலி, குரும்பூர் சாலை மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும்
வாகனங்கள்.
திருநெல்வேலி, குரும்பூர் சாலை மார்க்கமாக திருவிழாவிற்குவரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் திருநெல்வேலி சாலையில் உள்ள வியாபாரிகள் சங்க வாகன நிறுத்தம் (ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்), அன்புநகர் வாகன நிறுத்தம், குமரன் Scan centre எதிரே உள்ள வாகன நிறுத்தம் (குமாரபுரம்), ஆதித்தனார் கல்லூரி பணியாளர் குடியிருப்பு வாகன நிறுத்தம் மற்றும் அருள்முருகன்நகர் (கிருஷ்ணாநகர்) வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும். திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
3. நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
நாகர்கோவில், திசையன்விளை, சாத்தான்குளம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் பரமன்குறிச்சி சாலையில் உள்ள FCI குடோன் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் டand வாகன நிறுத்தம், சுந்தர் டand வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும். திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
4. கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம்;சாலை மார்க்கமாக வந்து, திரும்பிச் செல்லும் வாகனங்கள்.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து பரமன்குறிச்சி சாலையில் வலதுபுறம் திரும்பி FCI குடோன் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் டand வாகன நிறுத்தம், சுந்தர் Land வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் நிறுத்தவும். திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும்.
எனவே பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து சம்மந்தமான அறிவிப்புகளை கடைபிடித்து, சீரான போக்குவரத்து நடைபெற காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 3,686 வழக்குகளுக்கு தீர்வு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:32:16 AM (IST)

பெண்ணை அடித்து உதைத்து 3 பவுன் செயின் பறிப்பு : கொள்ளையனுக்கு போலீசார் வலைவீச்சு!!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:30:36 AM (IST)










