» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா

செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)



நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மாணவர்களுக்கான பதவியேற்பு விழா மற்றும் யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி ஆகிய மூன்று நிகழ்ச்சியும் ஒரே நாளில் நடைபெற்றது. 

விழாவில் நாசரேத் காவல் ஆய்வாளர் வனசுந்தர் தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கான பதவிப்பிரமான பேட்சை அணிவித்தார். பள்ளியின் தாளாளர் ஜமீன் சாலமோன் வரவேற்று பேசினார். தாளாளர் ஜமீன் சாலமோன் நாசரேத் காவல் ஆய்வாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார். பள்ளியின் தலைவர் எலிசபெத் விழாவின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பள்ளியின் முதல்வர் ஜான்சி கனகராஜ் கொடி அசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். 

பள்ளியின் உள்ள மாணவர்களுக்கு தலைவர்கள் கல்வி அமைச்சர். விளையாட்டு துறை அமைச்சர். ஒழுங்குமுறை அமைச்சர் கலாச்சார அமைச்சர். சுற்றுச்சூழல் அமைச்சர். மற்றும் சிவப்பு நீளம் பச்சை மஞ்சள் அணிக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் அணி சார்பாக மாணவர்கள் நாடகம் போட்டு நடித்து எவ்வாறு நமது வருங்காலத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு மரம் வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் மரங்களை வெட்டக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. வீணாக புகையை ஏற்படுத்தி மாசு செய்யக்கூடாது. மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் தண்ணீரை வீணாக்கக்கூடாது. என நடித்துக் காட்டினர். 

அதன் பின்னர் நாசரேத் ஆய்வாளர் வனசுந்தர் மரக்கன்றுகளை நட்டு விட்டு மாணவர்களின் நலன்களை பற்றியும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதை விளக்கினார் மாணவர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள் என சிறப்புரையாற்றினார் அதன் பின் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா சாகசம் செய்து காட்டினர்.முடிவில் பள்ளியின் உதவி முதல்வர் மாரி தங்கம் நன்றி கூறினார். தேசிய கீதம் முழங்க விழா முடிவுற்றது ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory