» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி போராட்டம்: ஆதரவு கூட்டமைப்பினர் பேட்டி
செவ்வாய் 24, ஜூன் 2025 3:07:12 PM (IST)

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி போராட்டங்கள் நடத்தப்படும் என்று ஆலைக்கு ஆதரவான கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி வணிகர் சங்க பேரவையைச் சார்ந்த ஜெயபாலன், மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் கணேசன், ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்த திருமதி தங்கம், துளசி சோசியல் டிரஸ்ட் தனலட்சுமி, திரேஸ்புரம் மீனவர் சங்கத்தை சேர்ந்த சம்சுதீன், வழக்கறிஞர் விக்டர், பண்டாரம் பட்டியை சேர்ந்த மரிய செல்வகுமார் மற்றும் சாமுவேல்,தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சார்ந்த வரதராஜன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சார்ந்த ரமேஷ் உள்ளிட்ட பலர் கூட்டாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பை மேற்கொண்டனர்.
துளசி அறக்கட்டளைச் சார்ந்த தனலட்சுமி கூறுகையில் "பல வதந்திகளால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. இங்கே கார் கம்பெனி, ஐடி நிறுவனங்கள் வந்துள்ளது என்று சொல்கின்றனர். ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியூர்களில் சென்று வேலை செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களை அரசோ, வேறு நிறுவனமோ சந்தித்து வேலை வாய்ப்பு வழங்கவில்லை. எங்கள் வீடுகளைச் சார்ந்த படித்த பிள்ளைகளை வேலைக்காக வெளியூர் அனுப்பவும் சூழ்நிலை உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கினால் இங்கே வேலை வாய்ப்பு கொடுக்க வாய்ப்பு உண்டு. இங்கு போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால் இந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையில் ஐந்தாயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வந்தனர். அங்கு வேலை வாய்ப்பு பெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமத்தைச் சார்ந்த மக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். தெற்கு வரவேண்டியபுரம் உள்ளிட்ட பல கிராமங்கள் வெறிச்சோடி கிடைக்கின்றன எனவே அரசு எங்களது கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும்.இதே நிலைமை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தால் நாங்கள் அடுத்த கட்டமாக பல கட்ட போராட்டங்கள் மூலமாக எங்களது கருத்துக்களை எடுத்து கூறுவோம் என்று கூறினார்.
பண்டாரம் பட்டி சேர்ந்த மரிய செல்வகுமார் கூறும்போது "ஸ்டெர்லைட் ஆலை இயங்கும்போது பண்டாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சார்ந்தவர்கள் 1500 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வந்தோம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களில் நானும் ஒருவன் ஸ்டெர்லைட் ஆலை இருக்கும்போதும் மூடிய பிறகும் எங்கள் கிராமத்திற்கு பல்வேறு உதவிகளை வழங்கினார்கள்.
ஸ்டெர்லைட் நிறுவனம் பல சமுதாய வளர்ச்சி பணிகளை இந்த கிராமத்துக்கு செய்துள்ளது ஆலை இயங்கிய போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலர் இந்த ஆலையில் வேலை வாய்ப்பு பெற்று வந்தோம். தற்போது எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பலர் வேலை வாய்ப்பு இல்லாததால் மூடை சுமக்க சென்று வருகின்றனர். பலர் கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தையும்,ஸ்டெர்லைட் அனல்மின் நிலையத்தையும் உடனடியாக திறக்க வேண்டும். திறந்தால் எங்கள் கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளனர். எனவே இந்த நிறுவனத்தை திறக்க வேண்டும் என்று கூறினார்.
வணிகர் சங்க பேரவையைச் சார்ந்த பிகே ஜெயபாலன் கூறுகையில் "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் சுமார் 5,000 பேர் நேரடியாகவும் 25 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை பார்த்து வந்தனர். ஸ்டெர்லைட் நிறுவனத்தால் தூத்துக்குடியில் வாழக்கூடிய மக்களை வாழ்வாதாரம் அதிகமாக கிடைத்து வந்தது கிராம மக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தூத்துக்குடி வந்தபோது பேசுகையில்... தூத்துக்குடி மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தொழிற்சாலைகள் வரவேண்டும் என்றார். தொழிற்சாலை மூடினால் எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும், தொழிற்சாலை மூடுவதால் சீனா நாட்டிற்கு தான் லாபம் நமக்கு லாபம் இல்லை. தொழிற்சாலை வந்தால் அரசுக்கு லாபம், வணிகர்களுக்கு லாபம்.

தொழிற்சாலை சார்ந்த வரக்கூடிய தொழிலாளர்கள் இங்குதான் பொருட்களை வாங்குகிறார்கள். இதன் மூலமாக வணிகம் அதிகரிக்கும். தொழிற்சாலை வேண்டும் தொழிற்சாலைகள் வந்தால் தான் இளைய தலைமுறைக்கு நல்ல வேலைகள் கிடைக்கும் தொழிற்சாலை மூடுவது நல்லது இல்லை என்ற அவர்... தொழிற்சாலை திறப்பதற்கு பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் எங்கள் மக்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் ஸ்டெர்லைட் போன்ற நல்ல கம்பெனி வேண்டும் என்றார்.
மக்கள் கருத்து
LingamJun 25, 2025 - 08:23:13 PM | Posted IP 172.7*****
Sterlite Thoothukudi ku vandam vanthal porrattam varum
கூ முட்டாள்கள்Jun 25, 2025 - 07:01:16 PM | Posted IP 172.7*****
ஸ்டெர்லைட் எதற்காக தூத்துகுடில இருக்கு ?? தூத்துக்குடி துறைமுகம் இருப்பதனால் கப்பல் மூலமாக காப்பர் ஐ காசுக்காக வெளிநாட்டில் (சீனா, போன்ற நாடுகளுக்கு) தான் விற்க லாயக்கு.
முட்டாள்கள்Jun 25, 2025 - 06:58:33 PM | Posted IP 172.7*****
நம் நாட்டில் முட்டாள் அரசியல்வாதிகள் இருக்கும் வரை சரியாக உருப்படாது, உருப்படியாக காலிப்பன்ன மாட்டாங்க திறக்க, மூட, திறக்க, மூட அப்படியே தலையில் தூக்கி வைப்பாங்க, அதில் பலியானவர்கள் எல்லாம் அப்பாவி மக்கள் தான். முதல்ல அரசியல்வாதிகளை தான் துரத்தி விடணும் .
சந்திர சிங்Jun 25, 2025 - 05:15:07 PM | Posted IP 162.1*****
தண்ணீர் தட்டுப்பாடு வரும்.. இயற்கை மாசுபடும்.. கண்களை குத்தி விட்டு உலகத்தை சுற்றி பார்க்க யார் போவார்? ஸ்டெர்லைட் தேவை இல்லை.. இயற்கை வழி வாழ்வாதாரத்திற்கு திரும்புங்கள்.. வேறு தண்ணீர் உள்ள இடத்தில் ஆலையை நிறுவனங்கள்..
மகாகணபதிJun 25, 2025 - 10:19:19 AM | Posted IP 162.1*****
முதலில் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது அந்த உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொண்டு இருக்கும் ஸ்டெர்லைட் தூத்துக்குடி க்கு வேண்டவே வேண்டாம். ஸ்டெர்லைட் உடல் நலம் கெடுக்கும். நான் இதை அனுபவத்தை சொல்கிறேன்
makkalJun 25, 2025 - 10:04:37 AM | Posted IP 172.7*****
Dispose of Sterlite
PEOPLESJun 24, 2025 - 03:27:41 PM | Posted IP 172.7*****
நீங்கதானே முட்டாள்த்தனமாக மூட சொல்லி போராட்டம் நடத்துனீர்கள், இப்போது திறக்க சொல்லுகிறீர்கள். எல்லாம் கர்மா.
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணி : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!
வியாழன் 10, ஜூலை 2025 7:23:07 AM (IST)

GAJAGESWARIJun 26, 2025 - 09:54:47 AM | Posted IP 172.7*****