» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணி தாக்குதல்: தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

திங்கள் 23, ஜூன் 2025 3:16:22 PM (IST)



திண்டுக்கலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மத்திய அரசின் 11 ஆண்டுகால மக்கள் விரோத கொள்கைகளை மக்களிடம் எடுத்துக் கூறிய போது, திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார் மீது இந்து முன்னனியினர் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவத்தைக் கண்டித்தும், இந்து முன்னணினரை கைது செய்ய கோரியும் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் எம்எஸ் முத்து தலைமை தாங்கினார்.

ராமமூர்த்தி, ரவி தாகூர் முன்னிலை வகித்தனர். கே.பி ஆறுமுகம் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் அப்பாதுரை, மாவட்ட செயற்குழு சங்கரன் ஓன்றிய செயலாளர், மாவட்டக்குழு, காசி ஸ்ரீநாத் சுரேஸ், மாநகரக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம் காஸ்ட்ரோ கிஷோர் ஆனந்த், முத்து சிப்பி தாமோதரன் நாகராஜ், வயனபெருமாள், மனோகரன், ஜேம்ஸ், செல்வம், முருகன், சன்முகசுந்தரம், சாம்பசிவம், ஆபிரகாம் குருஸ், பெருமாள், மணவாளன், தங்கவேல், பாலமுருகன், தசலிஸ், செல்வம்உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

VIJAY VIJAYJun 23, 2025 - 03:28:56 PM | Posted IP 162.1*****

நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? பிரியாணி தயாராக உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!

திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory