» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

தூத்துக்குடியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிராமிய கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திபு ஆலோசனையின் பேரில், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம், புதுக்கோட்டை பகுதிகளில் தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தாரை தப்பட்டைகள் முழங்க கிராமிய நடனம், விழிப்புணர்வு பாடல், நாடகம் போன்றவை மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி அனைத்தும் மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுசியா, தலைமை காவலர்கள் பொன்னரசி, ராஜ ராஜேஸ்வரி, காவலர்கள் சண்முக பிரியா, மணி செல்வியா, புதுக்கோட்டை பகுதிகளில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பைக் விபத்தில் மீனவர் பலி!
வியாழன் 10, ஜூலை 2025 10:40:09 AM (IST)

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)
