» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400 ஆவது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுமீன் நிறுவனங்களை மூடக் கோரி கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில, தொடர் போராட்டம் தொடங்கிய 400 ஆவது நாள் நிகழ்ச்சி பொட்டலூரணியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குப் போராட்டக்குழு பொறுப்பாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
பொறுப்பாளர் இராதாகிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்த் தேசியப் பேரவை பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த தென்மாறன், சமூக ஆர்வளர் மோகன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். புதுக்கோட்டை பாவாணன் சிறப்புரை ஆற்றினார். திருவைகுண் செயபால், இளங்கோ பாண்டியன், லெனின், தங்கராச் உள்ளிட்ட தமிழ் ஆர்வளர்களும் திரளான ஊர்ப் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் பேசிய நிர்வாகிகள், "கழிவு மீன்நிறுனங்கள் மூடப்படவேண்டும்; பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போராட்டக்குழுவின் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்தனர். நிறைவாக பொறுப்பாளர் பால்ராச் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு பணி : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!!
வியாழன் 10, ஜூலை 2025 7:23:07 AM (IST)

தூத்துக்குடி போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
வியாழன் 10, ஜூலை 2025 7:08:14 AM (IST)

ரயில் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எம்பவர் இந்தியா கோரிக்கை!
புதன் 9, ஜூலை 2025 4:56:34 PM (IST)
