» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா: முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்

வியாழன் 19, ஜூன் 2025 11:50:55 AM (IST)



தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. 

ராகுல் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர்,காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.பெருமாள்சாமி தலைமையில் சிதம்பர நகர் நான்காவது தெருவில் உள்ள பாசக்கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ்,மாநகரச் செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிவராஜ் மோகன் மாநில பேச்சாளர் பார்த்திபன், வக்கீல் பிரிவு பிரதிப் தினகரன், பிரேம்நாத், எஸ்சி / எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory