» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை!

வியாழன் 19, ஜூன் 2025 10:49:32 AM (IST)

தூத்துக்குடியில் பள்ளி, கோவில் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் "தூத்துக்குடி எஸ்.ஏ.வி., பள்ளியின் மேல் பக்கம் சுமார் 50 மீட்டர் தூரத்திலும், சிவன் கோவில் அருகே 100 மீ தூரத்திலும்   டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்துள்ளது. 

இந்த கடையை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. தற்போது திமுக அரசு மதுபானங்கள் சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் செய்துள்ளதாக அறிகிறோம். எனவே எங்களது கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்களில் மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory