» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூத்த குடிமக்கள் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் : ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு!

செவ்வாய் 17, ஜூன் 2025 5:33:00 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் சீனியர் சிட்டிசன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள் நலன் கருதி சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் செயலி (Senior Citizen App) Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in (கைப்பேசி செயலி) சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்களால் செப்டம்பர், 2023-ல் வெளியிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த கைப்பேசி செயலியில் மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள். மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ மருத்துவமனை விவரங்கள் மற்றும் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த கைப்பேசி செயலி மூலம் தமிழ்நாடு மூத்த குடிமக்கள் பலரும் பயன்பெற்று வருகிறார்கள். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்களும் Senior Citizen App (Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in) என்ற கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து தங்களுக்கு தேவையான விபரங்களை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory