» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை!
செவ்வாய் 17, ஜூன் 2025 4:35:07 PM (IST)
மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகனை சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 59 வார்டு மாமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி மாநகர அதிமுக தெற்குப் பகுதி செயலாளராகவும் இருந்து வருபவர் எஸ்.பி.எஸ்.ராஜா. அதிமுக முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ஆவார்.தூத்துக்குடி மில்லர் புரத்தை முகவரியாக கொண்டுள்ள நிலையில், மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்த காரணங்களால் மற்றும் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது சென்னையில் குடியிருந்து வருவதோடு முறையாக தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை என்கிற பொதுமக்களின் குற்றச்சாட்டுகளும் உள்ளன.
இந்நிலையில் சென்னையில் தான் புதிதாக தொடங்கவுள்ள தொழில் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி தனது சகோதரியான பொன்னரசி என்பவரிடம் ₹17 கோடியை கடனாக பெற்றதாகவும், மேலும் பணம் பெற்று முறையாக பங்குதாரராக சேர்க்காமல் மற்றும் உரிய பணத்தை திரும்ப வழங்காததால் சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ₹17 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சரான எஸ்பி சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ததோடு, வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










