» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பன்றிகளிடமிருந்து விவசாயிகளை காக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

செவ்வாய் 17, ஜூன் 2025 3:27:13 PM (IST)



பன்றிகளிடமிருந்து விவசாயிகளையும், விளை பயிர்களையும் அரசு காக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 12 வது மாநாடு ஆழ்வார் திருநகரியிலுள்ள சுவேதா திருமண மண்டபத்தில் விஜயகுமார் லோகநாதன் மற்றும் சேதுராமலிங்கம் ஆகியோர் தலைமையில் தியாகசீலர் ப.மாணிக்கம் நினைவரங்கத்தில் 14.06.25ல் நடைபெற்றது.

தேசிய குழு உறுப்பினர் கே. சுப்பராயன் எம்.பி மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தும் மாவட்ட மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றினார். தேசிய குழு உறுப்பினர் டி.ராமசாமி, தியாகிகளின் நினைவு ஜோதியினை பெற்றுக்கொண்டு மாநாட்டை வாழ்த்தியும் சிறப்புரையாற்றினார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேதுராமலிங்கம் முன் வைத்தார். 

ஸ்தாபனம் மற்றும் வேலை அறிக்கையினை கட்சியின் மாவட்ட செயலாளர் பி.கரும்பன் சமர்பித்தார். அரசியல் அறிக்கையினை மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன் மாநாட்டில் முன் வைத்தார். வரவு செலவு அறிக்கையினை மாவட்ட பொருளாளர் த.சுப்பிரமணியன் முன் வைத்தார். மாநாட்டுப் பிரதிநிதிகளின் விவாதத்திற்கு பின்பு அரசியல்,ஸ்தாபன வேலை அறிக்கை மற்றும் வரவு செலவு ஆகிய அறிக்கைகள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வினியோகம் மின்சார வசதி தெரு விளக்குகள் சாலை வசதிகள் போக்குவரத்து வசதிகளை உடனடியாக தீர்க்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பன்றிகளிடமிருந்து விவசாயிகளையும் விவசாய விளை பொருள்களையும் பொது மக்களையும் பாதுகாத்திடவும் விவசாயிகள் அச்சமின்றி விவசாயத்தை மேற்கொள்ளவும் பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் மாவட்டத்தில் தனி குழு ஏற்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

பன்றிகளால் உயிர்சேதம் , பொருள் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டு ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் மாவட்ட செயலாளராக பி.கரும்பன், துணைச் செயலாளர்களாக வ.பாலமுருகன், ஜி.பாபு, பொருளாளராக சுப்பிரமணியன் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். நிறைவில் மாநில குழு உறுப்பினர் எஸ்.பி.ஞானசேகர் நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory