» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குவிந்த கேரள மீன் வியாபாரிகள் : மீன்களின் விலை 3 மடங்கு உயர்வு!
செவ்வாய் 17, ஜூன் 2025 11:09:52 AM (IST)

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகத்தில் கேரள மீன் வியாபாரிகள் குவிந்ததால் மீன்களின் விலை 3 மடங்கு அதிகரித்தது.
தூத்துக்குடியில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று 225 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இரவு 9 மணிக்கு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் பிடித்து வந்த மீன்கள் ஏல கூடத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. நேற்று முதல் நாள் என்பதால் மீன் வியாபாரிகள் அதிக அளவு குவிந்தனர்.
கேரள வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கியதால் மீன்களின் விலை 3 மடங்கு வரை அதிகரித்து காணப்பட்டது. இதனால் தூத்துக்குடி மீன் வியாபாரிகள் மீன்களை ஏலம் எடுக்கமுடியாமல் தவித்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் 5 மணி நேரத்துக்குள் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வர்த்தகம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 195 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று உள்ளனர். இன்றும் கேரளா மீன் வியாபாரிகள் வருவார்க்ள என்பதால், மீன்கள் அதிக விலைக்கு ஏலம் போகும் என்று விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










