» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் : மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!
திங்கள் 16, ஜூன் 2025 11:43:51 AM (IST)

கொல்லம் பரும்பு கிராமத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கொல்லம் பரும்பு கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோார்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், குளத்தூர் விளாத்திகுளத்துக்கும் இடையே கொல்லம்பரம்பு கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம் இங்கு இருந்து தூத்துக்குடிக்கு தினசரி காலை 8 மணிக்கு நண்பகல் ஒரு மணிக்கு மாலை 5.30 மணிக்கு ஆகிய நேரங்களில் மூன்று தடவை அரசு டவுன் பஸ் வந்து சென்று கொண்டிருந்தது.
குறுக்கு சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் இந்த பேருந்தை பயன்படுத்தி வந்தனர். மேலும் வேலைக்கு செல்பவர்களும் இந்த பேருந்தை நபியை சென்று வந்தனர். ஆனால் கடந்த ஜூன் 5-ம் தேதி முதல் இந்த பேருந்து சரியான நேரத்திற்கு எங்களது கிராமத்திற்கு வருவதில்லை.
இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள், வேலைக்கு செல்லும் பெரியவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். மேலும் எங்களது ஊரிலிருந்து குறுக்கு சாலை செல்வதற்கு ஆட்டோவில் சென்றால் 200 ரூபாய் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் பள்ளி மாணவ மாணவிகளின் படிப்பு வீணாக போகிறது. ஆகவே நிறுத்தப்பட்ட பேருந்தை சரியான நேரத்திற்கு எங்களது கிராமத்திற்கு வந்து செல்லும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










