» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எம்பவர் இந்தியா சார்பில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம்

திங்கள் 16, ஜூன் 2025 10:09:36 AM (IST)

எம்பவர் இந்தியா சார்பில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது

தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு சார்பில் பீச் ரோட்டில் அமைந்துள்ள எம்பவர் மக்கள் மருந்தகத்தில் முதியோர்கள் மீதான வன்கொடுமை எதிர்ப்புக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவச் செயலாளர் ஆ.சங்கர் கூறியதாவது :

இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர்கள் அதிக அளவில் புறக்கணிக்கப்படும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   2023-ம் வருடத்துடன் ஒப்பிடும் போது சென்ற ஆண்டு இந்தியாவில் வாழும் முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை 57%-லிருந்து 33% ஆக உயர்ந்துள்ளது. இதில் 68% ஆண்கள் மற்றும் 63% பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெருநகரங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமான வன்கொடுமை பெங்களுருவிலும் (82%), குறைந்தபட்ச வன்கொடுமை டெல்லியிலும் (27%) பதிவாகியுள்ளன. இதில் புறக்கணிப்பு (49%), அவமதிப்பு (63%), வாய்மொழி வசைமொழிகள் (71%) தவிரவும் உடல்ரீதியாகவும் முதியோர் துன்புறுத்தப்படுகின்றனர். இவர்களில் 77% தங்களைப் பாதுகாத்துக் கொள்ளக் காவல்துறையை அணுக வேண்டும் எனும் விழிப்புணர்வோடு தான் உள்ளனர். இருப்பினும், 16% மட்டுமே புகார் அளிக்க முன் வருகின்றனர்.

நகரங்களில் வசிக்கும் முதியோர்கள் தங்களைப் பெரிதும் கொடுமைப்படுத்துபவர்கள் மருமகள்கள் (71%) மற்றும் மகன்கள் (69%) எனத் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடும்ப கவுரவத்தைப் பாதுகாக்கவே பல நேரங்களில் அத்து மீறல்களை மறைத்து வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முதியோரைப் பாதுகாக்க அவர்களுடைய பொருளாதாரச் சார்பின்மையை அதிகப்படுத்துதல், தலைமுறை இடைவெளியைக் குறைக்கும் வகையில் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், முதியோருக்கு உதவ சுய உதவிக் குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நாளின் குறிக்கோள் ஆகும்.

இதனிடையே முதியோர் நலன் காக்க தெருவோரங்களில் வயதான பெரியவர்கள் ஆதரவின்றி இருக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்கு என்றே '1253' ஹெல்ப் லைன் உள்ளது. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதரவற்ற முதியவர்களுக்கு இந்த ஹெல்ப் லைனில் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்லி அவர்களுக்கு உதவலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் '1800 180 1253' என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம் என எம்பவர் சங்கர் கூறினார். நிகழ்ச்சியில் எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory