» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஆவேசம்!

ஞாயிறு 15, ஜூன் 2025 7:49:19 PM (IST)



தமிழ்நாட்டில் ‘கள்’ இறக்க அனுமதிக்கக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் பனை ஏறும் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான பனை மரத்தில் ஏறி ‘கள்’ இறக்கினார்.

தமிழ்நாட்டில் தற்போது டாஸ்மாக் மதுகடை மூலம் மதுபானங்கள் தயாரித்து வழங்கப்படுவது போல் தமிழக மாநிலத்தில் தென்னை மற்றும் பனை 'கள்' இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை, குலசேகரன்பட்டினம் பகுதியில் கள் இறங்க அரசு அனுமதிக்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கள் இறக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி சாத்தான்குளம் அருகே பெரியதாழை மேட்டில் உள்ள எள்ளுவிளை வைரவ நாடார் என்பவரது தோட்டத்தில் பனையிலிருந்து ‘கள்’ இறக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பனை மரத்தில் ஏறினார். அவருக்கு உதவியாக பனை தொழிலாளர்கள் பாண்டியன், விக்டர் ஆகியோரும் மரத்தில ஏறினர். பனையேறிய சீமான், 5 நிமிடத்தில் கிழே இறங்கினார். 

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் பனை பட்டையில் கள் அருந்தினர். இதில் தமிழநாடு கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் நல்லுசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பனை கள்ளை போதை பொருள் அறிவித்துள்ளனர். இது தவறு, இந்தியாவில் கேரளம் உள்ளிடட. மற்ற மாநிலத்தில் கள் இறக்க அனுமதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மறுக்கப்படுவது ஏன். 

டாக்டர் கிருஷ்ணசாமி மகன் டாக்டர் குப்புசாமி கள் விஷதன்மை உள்ளது என தெரிவித்துள்ளார். அவர் கள் விஷத்தன்மை போதை பொருள் என நிர்மித்தால் ரூ.10 கோடி கொடுக்க தயார். கள் இறங்க அனுமதி தரவில்லை என்றால் இதனால் ஆட்சி மாற்றும் நிகழ்வது உறுதி என்றார். 

தொடர்ந்து பேசிய சீமான், பனைகள், தென்னை கள் வேளாண்மையோடு சேர்ந்தது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடை இருந்ததை உடைத்தெறிந்தோம். அதே தமிழகத்தில் தேசிய பானமான கள் இறங்க அனுமதி மறுக்கப்பட்டதை உடைத்தெறிவோம். கள் போதை பானம் என்றால் டாஸ்மாக் கடையில் விற்கப்படுவது மிளகு ரசமா? அல்லது புனித நீரா? கள் பாதுகாபபு இயக்க தலைவர் நல்லுச்சாமி, கள் அனுமதிகோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறார். 

மற்ற மாநிலத்தில் கள் இறக்க அனுமதி இருக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்யப்படுவது ஏன்? பனை கள்ளுக்கு ஏற்பட்ட தடையால் பனை மரங்கள் குறைநது வருகிறது. அதனால் நாம் தமிழர் கட்சி சார்பில் அனைத்து இடங்களிலும் பனை விதை விதைத்து வருகிறோம். கள் விற்க அனுமதி கேட்டால் அரசு டாஸ்மாக் மது அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவுரை வழங்குகிறது. கள் எங்களுக்கு உரிமை. கள்ளுக்கான தடையை மீட்டெடுப்பதே எங்களது கடமை. ஆதலால ஒற்றுபடுவோம் வெல்வோம் என்றார்.

இதில் மாநில நாம் தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் பாக்கியராஜ், கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுகுகன். இளைஞரணி அமைப்பாளர்கள் ஹிமாயின் கபீர், இடும்பவனம் கார்த்திக், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராஜசேகர், சாத்தான்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் பிராங்கிளின், தமிழ்நாடு நாடார் சங்க மாநில தலைவர் முத்துரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டநர். பனை ஏறும் போராட்டத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory