» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலி
ஞாயிறு 15, ஜூன் 2025 10:09:07 AM (IST)
ஆறுமுகநேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி ரயில்வே கேட் அருகில் உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி ஈஸ்வரி (68). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலகிருஷ்ணன் இறந்து விட்டார். ஈஸ்வரி தனது மகனுடன் வசித்து வந்தார்.
2 மகள்களும் தண்டவாளத்தின் மறுபுறத்தில் உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இதனால் ஈஸ்வரி அடிக்கடி மகள்களின் வீடுகளுக்கு சென்று வந்தார். நேற்று மதியம் ஈஸ்வரி பெருமாள்புரத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து மகள்களின் வீடுகளுக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஈஸ்வரி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே ரயிலை டிரைவர் நிறுத்தி விட்டு, ஆறுமுகநேரி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து ஆறுமுகநேரி போலீசார் விரைந்து சென்று, இறந்த ஈசுவரியின் உடலை மீட்டனர். பின்னர் ரயில் சுமார் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இறந்த ஈஸ்வரியின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










