» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதி கைக்குழந்தை உள்பட 3 பேர் காயம் : கிராம மக்கள் சாலைமறியல்

ஞாயிறு 15, ஜூன் 2025 10:03:44 AM (IST)



கயத்தாறு அருகே பைக் மீது லாரி மோதி 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து கல்குவாரி லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் காலனி தெருைவச் சேர்ந்தவர் கற்பகராஜ். இவருடைய மனைவி அனிஷா (26). இவர்களுக்கு அதுலியாஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று காலையில் அனிஷா தனது தம்பி இளையராஜாவின் (25) மோட்டார் சைக்கிளில் குழந்தை அதுலியாஸ்ரீயுடன் சென்றார். 

ஆத்திகுளம்-மானங்காத்தான் சாலையில் சென்றபோது, அந்த வழியாக தனியார் கிரஷரில் இருந்து தார் கலவை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் இளையராஜா, அனிஷா, குழந்தை அதுலியாஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே ஆத்திகுளம் வழியாக தனியார் கிரஷர் லாரிகள், கல்குவாரி லாரிகள் அதிகளவில் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அவற்றை மாற்று வழியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே கயத்தாறு தாசில்தார் சுந்தரராகவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி மற்றும் போலீசார், அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாாிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory