» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்

சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)



தூத்துக்குடியில் மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில் 4.O தொழில்நுட்ப மையத்தில் இன்று (14.06.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் Advanced CNC பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தாவது : தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டும், தற்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் மாணவர்களின் தனித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முதன்மை தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு தொழில் நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்தவகையில், தூத்துக்குடி கோரம்பள்ளத்திலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Advanced CNC தொழிற்பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு Advanced CNC இயந்திரத்தினை கையாளுவது, இயந்திர பணிப்பொருட்களை தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அனுபவமுள்ள பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்து Primo Engineers India Pvt Ltd என்ற தனியார் தொழில் நிறுவனத்தின் இயக்குநர்களாகிய G.வெங்கடேசன் மற்றும் M.சுவாமிநாதன் அவர்களால் 02.06.2025 முதல் 13.06.2025 வரை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள் 5 நபர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி பயிற்றுநர்கள் 12 நபர்கள், தூத்துக்குடி மற்றும் வேப்பலோடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் Advanced CNC தொழிற்பிரிவைச் சார்ந்த 40 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.

மேலும், மாணவர்களாகிய நீங்கள் இதுபோன்ற உயர்தரமான பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுவதன் மூலம் தங்களது தொழில் திறன்களை வளர்த்து கொள்ளுவதுடன் தொழில் சார்ந்த அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ள முடியும். தற்போது சமுதாயத்தில் உள்ள தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் தங்களது தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகவுள்ளது. 

நீங்கள் அனுபவம் வாய்ந்த ஒரு திறமையான பணியாளர்களாக இருக்கிறீர்களானால் உங்களை எந்த ஒரு நிறுவனமும் இழக்காது. அந்த அளவிற்கு உங்களுடைய தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் பயன்பெறும் வகையில் மிகவும் பயனுள்ள வகையில் கடந்த 12 நாட்களாக இங்கு தங்கி உயர்தரமான பயிற்சி அளித்த Primo Engineers India Pvt Ltd என்ற தனியார் தொழில் நிறுவனத்தின் இயக்குநர்களாகிய G.வெங்கடேசன் மற்றும் M.சுவாமிநாதன் ஆகியோர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

எனவே, மாணவர்கள் அனைவரும் இந்தப் பயிற்சியினை தொடக்கமாக வைத்து இன்னும் தங்களது தனித்திறமைகளை மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் மிகவும் உயர்ந்த இடத்திற்கு செல்ல எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப தெரிவித்தார்.

முன்னதாக, பயிற்சி நாட்களில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்த இயந்திர பணிப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப பார்வையிட்டு, அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அதனைதொடர்ந்து, பயிற்சியில் கலந்துகொண்ட பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ்ராம், தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் / துணை முதல்வர் வேல்முருகன், உதவி இயக்குநர் (பொ), (திறன் மேம்பாட்டுக் கழகம்) செந்தில்குமார், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors






CSC Computer Education



Thoothukudi Business Directory