» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மூலம் முன்னெடுக்கப்பட்ட பிட்னஸ் சேலஞ்ச் என்ற சவாலில் கலந்து கொண்டு உடல் நலத்தை பேணிக்காத்து வரும் 40-க்கும் மேற்பட்ட நேரடி சார்பு ஆய்வாளர்களின் முதல் மாத உடற்பயிற்சி மதிப்பாய்வுக்கான மருத்துவ முகாம் கடந்த 29.03.2025 அன்றும், இரண்டாம் மாத உடற்பயிற்சி மதிப்பாய்வுக்கான மருத்துவ முகாம் கடந்த 03.05.2025 அன்றும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்ட மதிப்பாய்விற்காக ஆயுதப்படை வளாகத்தில் வைத்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் முன்னிலையில் கணேஷ்நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பாக முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில் மருத்துவர் ரசுல் தலைமையிலான மருத்துவ ஊழியர்கள் சார்பு ஆய்வாளர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, உயரம், எடை போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு முழு உடல் மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனைமுருகன் ஆகியோரும் முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட நேரடி சார்பு ஆய்வாளர்களிடம் காவல் நிலைய பணிகள் குறித்தும் குறை நிறைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST)

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST)

நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து : டிரைவர் உயிரிழப்பு
ஞாயிறு 14, டிசம்பர் 2025 10:40:48 AM (IST)










