» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

தூத்துக்குடியில் விபத்தில் இறந்த அனல்மின் நிலைய பொறியாளர் குடும்பத்திற்கு ரூ.1கோடியே 30 லட்சம் நஷ்டஈடு வழங்க திருநெல்வெலி மாவட்ட மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூர் தாலூகா சேர்ந்தமங்களம் மறவர் தெருவை சார்ந்த அய்யாகண்ணு மகன் கணேஷ் (46), என்பவர் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 22.11.2019 அன்று தெர்மல் கேம்ப் -1 அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி மோதி படுகாயம் அடைந்தவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே இறந்து போனார்.
அவரது இறப்பு குறித்து அவரது மனைவி ராஜசெல்வம், அவரது இரு மகள்கள் மற்றும் அவரது தாய். திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வக்கில் வி.ரவீந்திரன் மூலமாக ரூ.2,00,00,000 கேட்டு மனு தாக்கல் செய்தார். இன்று மாவட்ட நீதிபதி சாய்சரவணன் இலவச சட்ட உதவி மைய செயலாளர் சார்பு நீதிபதி முரளிதரன், மற்றும் மாவட்ட நீதிபதிகள் உரிமையியல் நீதிபதிகள், முன்னிலையில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் லாரியின் காப்பீட்டு கழகமான ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பனி இறந்து போன கணேஷ் மனைவி, பிள்ளைகள் மற்றும் தாயார் ஆகியோர்களுக்கு நஷ்ஈடாக ரூ.1,30,00,000/ வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் வி. ரவீந்திரன் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஜூலை 2025 10:24:12 AM (IST)

திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு : முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூபேச்சு
வியாழன் 10, ஜூலை 2025 10:14:04 AM (IST)

நாசரேத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் பதவி ஏற்பு
வியாழன் 10, ஜூலை 2025 10:03:56 AM (IST)

மனித உரிமைகள் குறித்த குறும்பட போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்!
வியாழன் 10, ஜூலை 2025 7:59:12 AM (IST)

காதலனுடன் தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!!
வியாழன் 10, ஜூலை 2025 7:35:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
வியாழன் 10, ஜூலை 2025 7:29:04 AM (IST)
