» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையம் சார்பில் பள்ளிக்கு நிதியுதவி!
சனி 14, ஜூன் 2025 11:16:49 AM (IST)

புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் சீரமைப்பு பணிகளுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையத்தின் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டிவிஎஸ் சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பாக ரூ.14.78, இலட்சம் மதிப்பில் மாணவர்கள் பல்நோக்கு அரங்கம், இரண்டு புதிய கழிப்பறைகள் கட்டுதல், இரண்டு புதிய இரண்டு சிறுநீர் கழிப்பறைகள் கட்டுதல், நான்கு பழைய கழிப்பறைககள் பழுது பார்த்தல், நடைபாதைகளில் தள கற்கள் பதித்தல், பத்து நல்லியுடன் கூடிய கை கழுவும் இடங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.
இப்பணிக்கு மக்களின் பங்களிப்பு 15% தொகையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு மையத்தின் மூலம் காசோலையாக நேற்று வழங்கப்பட்டது. பள்ளியின் கோரிக்கையினை ஏற்று வளர்ச்சிக்காக நல் உள்ளத்தோடு நிதியுதவி வழங்கிய சகோ.மோகன் சி. லாசரஸ், மற்றும் இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் இப்பணிக்கு புறையூர் வெல்ஃபர் டிரஸ்ட் மூலமாக ரூ.50ஆயிரம் காசோலை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










