» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாழை விவசாயத்தில் நஷ்டம்: விவசாயி விஷம் குடித்து தற்கொலை
சனி 14, ஜூன் 2025 8:58:46 AM (IST)
சாத்தான்குளம் அருகே வாழை விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வேலன்புதுக்குளத்தை சேர்ந்த நல்லகண்ணு மகன் பரமசிவன் (44). விவசாயி. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமான 4½ ஏக்கரில் வாழை பயிரிட்டு பயிரிட்டுள்ளார். அப்பகுதியில் விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காததால், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார்.
ஆனால் அந்த கிணற்றில் போதிய தண்ணீர் கிடைக்கவில்லையாம். தொடர்ந்து 2-வது ஆழ்துளை கிணறு அமைத்தாராம். அதிலும் போதிய தண்ணீர் இல்லையாம். இந்நிலையில் கிடைத்த தண்ணீரை கொண்டு வாழை தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார். இதில் ஓரளவு பயன்கிடைத்து, வாழை அறுவடைக்கு தயாராகியுள்ளது. வாழைத்தார்களை அறுவடை செய்துவிற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் வாழைத்தார்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லையாம்.
ஏற்கனவே, 2 ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் கிடைக்காத நிலையில், அறுவடை செய்த வாழைத்தார்களுக்கும் போதிய விலை கிடைக்காததால், கடுமையான நஷ்டத்தை சந்தித்த அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். நேற்று வீட்டில் யாரும் இல்லாமல் நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ராதா அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











BenistonJun 14, 2025 - 09:12:05 AM | Posted IP 162.1*****