» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தி.மு.க அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : கனிமொழி எம்.பி. பேச்சு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:39:54 AM (IST)

தி.மு.க அரசும், தமிழக முதல்-அமைச்சரும் செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் மறவன்மடத்தில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசும் போது, வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தோ்தலுக்கான பணிகளை கட்சியினர் இன்றே தொடங்க வேண்டும். தேர்தல் வெற்றிக்காக நமது உழைப்பை எப்படி செலவிட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நமக்கு தெளிவாக எடுத்துக் கூறி உள்ளார். கட்சியில் உறுப்பினர்களை அதிகமாக சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நிர்வாகிகளுக்கு இருக்கிறது. அந்த பணியை இப்போது இருந்தே தொடங்க வேண்டும்.
தி.மு.க அரசும், தமிழக முதல்-அமைச்சரும் செய்துள்ள சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும், மத்திய பா.ஜனதா அரசு தமிழக மக்களுக்கு செய்துள்ள துரோகங்களை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். நாம்(தி.மு.க.வினர்) அனைவரும் ஒற்றுமையுடன், வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் வர்த்தக அணி மாநில இணைச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)











வேடிக்கை பார்ப்பவன்Jun 13, 2025 - 11:22:05 AM | Posted IP 172.7*****