» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 13, ஜூன் 2025 8:24:11 AM (IST)

கோவில்பட்டியில் குடியிருப்புப் பகுதியில் பெட்ரோல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே நாகம்பட்டியைச் சேர்ந்தவரின் டேங்கர் லாரியை, வடக்கு கைலாசபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகசாமி ஓட்டி வந்தார். அவர், சென்னையில் டேங்கர் லாரியில் பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண்டு கழுகுமலைக்கு நேற்று அதிகாலை வந்தார். இங்குள்ள விற்பனை நிலையத்தில் இறக்கிவிட்டு பசுவந்தனைக்கு லாரியை ஓட்டிச் சென்றார்.
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியை அடுத்த தோணுகால் விலக்கு அருகேயுள்ள அணுகு சாலையில், லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர நடைமேடையை சேதப்படுத்தியபடி மரத்தில் மோதி, குடியிருப்புப் பகுதியிலுள்ள மின்கம்பம் முன் கவிழ்ந்தது.
இதில், டேங்கரிலிருந்து பெட்ரோல், டீசல் கசிந்து வெளியேறியது. ஆறுமுகசாமி லேசான காயத்துடன் உயிர்தப்பினார். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், தீயணைப்பு நிலையத்தினர் வந்து பெட்ரோல், டீசல் வெளியேறாமலிருக்கவும், தீவிபத்து நிகழாமலிருக்கவும் ரசாயன நுரையை பீய்ச்சியடித்தனர். பின்னர், கிரேன்கள் மூலம் லாரியை அப்புறப்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்துள்ள பகுதி அருகே நேரிட்ட விபத்தால் மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். மீட்புப் பணிகள் விரைவாக நடைபெற்hல் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










