» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு தடுக்கிறது : பா.ஜனதா மகளிர் அணி தலைவர் குற்றச்சாட்டு

வெள்ளி 13, ஜூன் 2025 8:20:45 AM (IST)



தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டாலே, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும் என பாஜக மாநில மகளிர் அணித் தலைவர் உமாரதி ராஜன் தெரிவித்தார்.

பாஜகவின் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து, தூத்துக்குடி பாஜக மாவட்ட அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியில் பாரதம் வளர்ச்சி பெற்று வருகிறது. குறிப்பாக, ஏழைகளின் நலனில் அக்கறை கொண்ட ஆட்சியாகவும், அனைத்து சாமானிய மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் செயல்பட்டு வருகிறது.

மகளிருக்கு விரைவில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 38 லட்சம் பேர் பயன்பெற்றனர். தற்போது, தமிழக அரசு சரிவர நடவடிக்கை எடுக்காததால் 21 லட்சமாக குறைந்துள்ளது.

மத்திய அரசு திட்டங்களை தமிழக அரசு தடுக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அகற்றப்பட்டாலே, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடையும்.பாலியல் வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யாதவரை பாலியல் குற்றங்கள் தொடர வாய்ப்பு உள்ளது. இது போன்ற குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார்.

பாஜக மாவட்ட தலைவர்கள் சித்ராங்கதன் (தெற்கு), சரவணகிருஷ்ணன் (வடக்கு), ஓபிசி அணி மாநில துனைத் தலைவர் விவேகம் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் சிவராமன், பொருளாளர் பரமசிவம், பொறுப்பாளர் அர்ஜூன் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory