» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளை காட்டி கொலை மிரட்டல்: 2 போ் கைது
வெள்ளி 13, ஜூன் 2025 8:07:15 AM (IST)
கோவில்பட்டியில் அரிவாளை காட்டி பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் புதுக்கிராமம், இலுப்பையூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலாயுதபுரம் வேளாண்மை பல்கலைக்கழகம் அருகே 2 இளைஞர்கள் அரிவாளுடன் நின்றுகொண்டு பொதுமக்களை மிரட்டுவதாக அவர்களுக்கு தகவல் கிடைத்ததாம்.
அங்கு சென்ற போலீசார், அந்த இளைஞர்களை பிடிக்க முயன்றனராம், அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம். எனினும், அவர்களை மடக்கி பிடித்து அரிவாளை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், வேலாயுதபுரம் 2ஆவது தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் ராம்குமார் (20), கருணாநிதி நகர் 3ஆவது தெருவை சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் மகன் மாதவன் (20) ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










