» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
வியாழன் 12, ஜூன் 2025 8:25:12 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயதுக்குள் குடும்ப கட்டுப்பாட்டு சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச்சான்று ஆகியவற்றுடன் அரசு இ- சேவை மையத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் 18 வயது பூர்த்தி அடைந்து முதிர்வு தொகை பெறாத பயனாளிகள் முதிர்வு தொகை பெறும் பொருட்டு பயனாளியின் வைப்புத்தொகை இரசீது நகல், பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல், குழந்தையின் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ அந்தந்த பகுதயில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திலோ சமர்ப்பித்து முதிர்வு தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)











S GracyJun 14, 2025 - 10:34:27 PM | Posted IP 104.2*****