» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விசாரணைக்கு 23 ஆண்டுகளாக ஆஜராகாத பஸ் டிரைவர் உள்பட 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
வியாழன் 12, ஜூன் 2025 8:09:44 PM (IST)
சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு 23 ஆண்டுகளாக ஆஜராகாத தனியார் பஸ் டிரைவர் உள்ளிட்ட 3 பேர் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மேல சாத்தான்குளத்தை சேர்ந்தவர் செல்லையா மகன் சுடலைமணி இவர் கடந்த 2000ஆம் ஆண்டு சாத்தான் குளம் மளிகை கடைக்காரர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார். இந்த வழக்கு 2003இல் விசாரணைக்கு வந்த பிறகு கடந்த 23 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார் அவருக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால அவர் தேடப்படும் குற்றவாளி என அறிவித்து சாத்தான்குளம் நீதிமன்ற நீதித்துறை நடுவர் தேவி ரக்க்ஷசா அறிவித்துள்ளார்.
இதேபோல் பேய்குளம்பகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடந்த விபத்து வழக்கில் தனியார் பஸ் டிரைவர் ஸ்ரீவைகுண்டம் பேட்மா நகரத்தை சேர்ந்த பத்மநாபன் மகன் ராமசாமி , என்பவரும் வழக்கு விசாரணைக்கு சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு நீதிமன்ற சார்பில் பிடிவாரண்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி தேவி ரக்க்ஷசா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளார்.
இதே போல் சாத்தான்குளம் அருகே உள்ள அம்பல சேரி ஆர்சி கோயில் தெருவை சேர்ந்தவர் மூக்கன் என்ற சவரிமுத்து மகன் ஜேம்ஸ் ராஜா கடந்த 2002 ஆம் ஆண்டு அதே ஊரில் நடந்த அடிதடி வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பித்தும் ஆஜராகாததால் ஜேம்ஸ் ராஜாவையும் தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் நீதிபதி தேவி ரக்க்ஷசா அறிவித்துள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)










