» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாதாள சாக்கடை இணைப்புக்கு கட்டாய வரி வசூல் : ரத்து செய்ய சிபிஎம் கோரிக்கை!
வியாழன் 12, ஜூன் 2025 4:00:00 PM (IST)

பாதாள சாக்கடை இணைப்பு வழங்காத வீடுகளுக்கு கட்டாய வரி வசூலை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎம் சார்பில் மக்கள் சந்திப்பு நடைபயணம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு நத்தம், புறம்போக்கு பகுதியில் இலவச பட்டா வழங்கிய இடத்தில் வீடுகட்டி குடியிருக்கும் குடும்பங்களுக்கு "அ" பதிவேற்றம் செய்து உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும், மாதம் மாதம் மின் கட்டணம் கணக்கீடு செய்திட வேண்டும், பாதாள சாக்கடை இணைப்பு வழங்காத வீடுகளுக்கு கட்டாய வரி வசூலை ரத்து செய்ய வேண்டும், போக்குவரத்து நெருக்கடியை போக்கிட விவிடி சிக்னல் மேம்பாலம் பணிகளை உடனே துவங்கிட வேண்டும் உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடைபயண இயக்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநகர் குழு உறுப்பினர் கே.ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் ஆர்.முத்துமாரி ஆகியோர் தலைமை வகித்தார். சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ரசல், மாநகர் செயலாளர் எம். எஸ்.முத்து, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.காசி, ஶ்ரீநாத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு இல.இராம மூர்த்தி, சிவந்தை சந்திப்பில் சசிகுமார், முனியசாமி வாட்டர் டேங்க் பகுதியில் காஸ்ட்ரோ, சிவந்தாகுளம் பகுதியில் வயனபெருமாள், பிரையன்ட் நகர் 7இல் மனோகரன், பிரையன்ட் நகர் 12 இல் ஜேம்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










