» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: பொம்மலாட்ட நிகழ்வு
வியாழன் 12, ஜூன் 2025 3:22:51 PM (IST)

தமிழகத்தோடு குமரி மாவட்டத்தை இணைக்க போராடி வெற்றி கண்ட மார்ஷல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் செல்போனினால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துக் கூறி புத்தகங்களை வாசிக்க சொல்லும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயவேணி தலைமை தாங்கினார். காமராஜர் நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி கலையின் குரல் நிறுவனர் சக்திவேல், குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன், புத்தக வாசிப்பு நற்பணி மன்ற மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆகியோர் இணைந்து மாபெரும் பொம்மலாட்ட விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர். ஏற்பாடுகளை காமராஜர் நற்பணி மன்றம் தலைவர் லாரன்ஸ் செயலாளர் வழக்கறிஞர் சிலுவை, பொருளாளர் ஆஸ்வால்ட், அமைப்பாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










