» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு உயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கல்!
வியாழன் 12, ஜூன் 2025 3:14:16 PM (IST)

தமிழ்நாடு கிராம வங்கி நாசரேத் கிளை சார்பில் அரசு உயிர் காப்பீடு திட்ட காசோலை வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் வாடிக்கையாளரான திருக்களூர் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31) பிரதம மந்திரி காப்பீடு திட்டமான பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டத்தில் காப்பீடு செய்திருந்தார்.
இவர் கடந்த 28.03.2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து அவரது வாரிசுதாரரான தாயார் லட்சுமிக்கு காப்பீடு ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வங்கி ஊழியர்கள் தாயார் லட்சுமியிடம் காப்பீடு தொகை ரூ. 2லட்சத்துக்கான காசோலை வழங்கினர்.
நிகழ்ச்சியில் வங்கியின் நிதிசார் கல்வி மைய ஆலோசகர் முருகேசன் கலந்து கொண்டு அரசு உயிர் காப்பீடு மற்றும் விபத்து காப்பீடு பற்றி அந்த பகுதி மக்களுக்கு எடுத்துரைத்தார். இதில் தமிழ் நாடு கிராம வங்கி நாசரேத் கிளை மேலாளர் நிறைமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்வேதா, டிவிஎஸ் வட்டார உதவியாளர்கள் அருள் ராமேஸ்வரி, கலைவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










