» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எட்டையபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்!
வியாழன் 12, ஜூன் 2025 10:04:27 AM (IST)

எட்டையபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட வேண்டும் என்று அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெறும் பொது மக்களின் அடிப்படை வசதி பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாகவும், பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்கவும், கொசுக்கடி மற்றும் சுகாதார சீர்கேடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும் மற்றும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் பொதுமக்கள் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவை பணிகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வரும் பட்சத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் பொது மக்களை திரட்டி அதிமுக சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும் என எட்டயபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










