» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழிலாளர் துறை அதிகாரி கார் கண்ணாடி உடைப்பு : தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 12, ஜூன் 2025 8:40:06 AM (IST)
தூத்துக்குடியில் தொழிலாளர் துறை அதிகாரியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி பூபாலராயர்புரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் பிரேம்குமார் (45). இவர் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 3-ந் தேதி புதியம்புத்தூர் சில்லாநத்தத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, முறையாக தொழிலாளர் துறையில் முத்திரையிடப்படாத எடை எந்திரம் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் உதவி ஆய்வாளர் பிரேம்குமார், அந்த எடை எந்திரத்தை பறிமுதல் செய்து தொழிலாளர் நல அலுவலகத்துக்கு கொண்டு சென்று வைத்து உள்ளார். இதனை தொடர்ந்து, சம்பவத்தன்று பிரேம்குமார் வீட்டில் இருந்த போது, அங்கு வந்த தனியார் நிறுவன உரிமையாளர் ராஜதுரை, திருமணி ஆகியோர் தகராறு செய்து மிரட்டல் விடுத்து உள்ளனர்.
பின்னர் அங்கு நின்ற பிரேம்குமாரின் கார் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










