» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருட்டு வழக்கில் 2பேர் கைது: ரூ.4.20 லட்சம் பறிமுதல்
வியாழன் 12, ஜூன் 2025 8:37:21 AM (IST)
வந்தவாசி அருகே பூட்டிய வீட்டில் 20 பவுன் நகையை திருடிவிட்டு தப்பிய 2 பேர் திருச்செந்தூரில் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் அங்கயர்கண்ணி. இவர் கடந்த மாதம் 16-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோதுமர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து வந்தவாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு, செஞ்சி, ஆரணி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த 180 சி.சி.டி.வி, கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் போலீசாரால் பல்வேறு வழக்கு சம்பந்தமாக 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுடைய புகைப்படங்களை வந்தவாசி போலீசார் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் பதிவு செய்ததை திருச்செந்தூர் போலீசார் பார்த்து வந்தவாசி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்அடிப்படையில் வந்தவாசி போலீசார் பல்வேறு சி.சி.டி.வி. ஆதாரங்களை வைத்து ஆய்வு செய்ததில் அங்கயற்கண்ணி வீட்டில் திருடியவர்கள் இவர்கள்தான் என்பது தெரிய வந்தது.
அதில் ஒருவர் கலசபாக்கம் தாலுகா தென்மாதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் மகன் ராமஜெயம் (38). மற்றொருவர் ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் நவீன் என்ற அப்பு (28). இதையடுத்து வந்தவாசி போலீசார் திருச்செந்தூர் சென்று இருவரிடமும் விசாரித்தனர்.
அப்போது அங்கயற்கண்ணி வீட்டில் திருடிய நகையை உருக்கி விற்பனை செய்ததில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கிடைத்ததாக தெரிவித்தனர். அந்த பணத்தை போலீசார் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுடன் திருட்டில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










