» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 12, ஜூன் 2025 8:07:52 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7,850, அகவிலைப்படி வழங்க வேண்டும். பணி ஓய்வுக்கு பின்னரும் காப்பீட்டுத் திட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் எம். ஜேசுமணி தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலர் இல. ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசினார். இதில், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கருப்பு உடை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










