» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!
வியாழன் 12, ஜூன் 2025 8:02:54 AM (IST)
கோவில்பட்டி அருகே 320 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் பதுக்கிவைத்து விற்பதாக கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.
அப்போது, பாண்டவர்மங்கலம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ஊருணி அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகளில் 320 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக புதியம்புத்தூர் நயினார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த கொம்பையா மகன் முருகன் என்ற யமஹா முருகன் (47) என்பவரைப் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் முருகனை கைது செய்து, 2 பைக்குகள், ரேஷன் அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
முருகன், ராஜீவ் நகர் 6ஆவது தெருவில் வசித்து வருவதாகவும், அவர் மீது தாளமுத்துநகர், சாத்தூர், புதியம்புத்தூர், புதுக்கோட்டை, சிப்காட், உவரி, சீவலப்பேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா, வெடிகுண்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










