» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போதை ஊசி விற்பனை: 2பேர் கைது!
புதன் 11, ஜூன் 2025 9:20:26 PM (IST)

தூத்துக்குடியில் போதை தரக்கூடிய ஊசிகளை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்னர்.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் இன்று தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தாளமுத்துநகர் சமர்வியாஸ் நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் செல்வகுமார் (45) மற்றும் திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் ரஹீம் (48) ஆகியோர் என்பதும் Tramadol Hydrochoride injection 50mg/ml என்னும் போதை ஊசிகளை மருந்து சீட்டு இல்லாமல் வெளியூரிலிருந்து சட்டவிரோதமாக வாங்கி விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த போதை ஊசிகள், ரூ.11,300 ரொக்க பணம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவர் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் மருந்தக கடை உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










