» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளம் அரசு பள்ளியில் மாற்றம் விருது வழங்கும் நிகழ்ச்சி
புதன் 11, ஜூன் 2025 8:44:41 PM (IST)

விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றம் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2025-ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கோவில்பட்டி & விளாத்திகுளம் ராகவா லாரன்ஸ் எல்வின் வினோ மக்கள் சேவை நற்பணி மன்றம் சார்பாக பேச்சிமுத்து என்ற லாரன்ஸ் தலைமையில் "மாற்றம் விருது" மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை படித்த லிங்கா ஆனந்தி, விண்ணரசி, ரசிகா ஆகியோருக்கும், அதேபோன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த சுஷ்மிதா, ராமஜெயம், முகமது ஆசிப் ஆகிய மூவருக்கும் விளாத்திகுளம் ஒன்றிய ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட த.வெ.க மாணவர் அணி நிர்வாகி சீனிபுஷ்பா, அறம் அறக்கட்டளை நிர்வாகி சித்துராஜ் விஏஓ உள்ளிட்டார் "மாற்றம் விருது" மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் தவசமுத்து, தொழிலதிபர்கள் பாலமுருகன், சுரேஷ், ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், கார்த்திக், சன்னாசி, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











BhaskaranJun 14, 2025 - 09:55:52 AM | Posted IP 162.1*****