» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பலி
புதன் 11, ஜூன் 2025 12:05:51 PM (IST)
சூரங்குடி அருகே பனை மரத்தில் ஏறி பதநீர் எடுக்க முயன்றபோது, தவறி விழுந்து படுகாயம் அடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகில் உள்ள வடக்குசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (62). பனைத் தொழில் செய்து வருகிறார். இன்று காலை அங்குள்ள தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆட்டோ மூலம் சூரங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சூரங்குடி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி சம்பவ இடத்திற்கு சென்று ராமச்சந்திரன் உடலை பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











ஒருவன்Jun 11, 2025 - 12:46:39 PM | Posted IP 104.2*****