» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும்: மேயர் தகவல்!!

செவ்வாய் 10, ஜூன் 2025 4:44:41 PM (IST)



தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் மாலை நேரத்திலும் செயல்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில் "அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மற்றும் உடன் இருப்போர்  கோரிக்கையினை தொடர்ந்து நாளை முதல் மாலை நேரத்திலும் அந்த வளாகத்திலுள்ள அம்மா உணவகம் செயல்படும் என்று தெரிவித்தார். 

ஆய்வின்போது, வட்ட  செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி  செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி  செயலாளர் ரவீந்திரன், பகுதி  செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ்  மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

Selvaraj.sJun 11, 2025 - 07:10:24 AM | Posted IP 162.1*****

மிக்க மகிழ்ச்சி நன்றி

makkalJun 10, 2025 - 05:09:47 PM | Posted IP 162.1*****

அரசு மருத்துமனையில் அவசர மற்றும் நோயாளிகள் வார்டுகளில் சிகிச்சை மிகவும் மோசமானதாக உள்ளது. நிறைய உயிரை கொல்லுகிறார்கள். எனக்கு தெரிந்தே இரண்டு உயிர்களை கொன்று விட்டார்கள். மனித உயிர்கள் என்று நினைக்கவில்லை. மிருகங்களை கவனிப்பது போல் அங்கு மருத்துவப்பணி உள்ளது. மக்களே தயவுசெய்து உங்களுக்கு உங்கள் உறவினர் முக்கியம் என்றால் யாரும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள். பின்பு உங்கள் அருமை உறவினர்களை இழக்க நேரிடும். பணத்தை கூட சம்பாதித்துவிடலாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory