» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் விரயம்: சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம்
சனி 24, மே 2025 10:46:56 AM (IST)

தூத்துக்குடி அருகே சாயர்புரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதைக் கண்டித்து சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் மெயின் ரோட்டில் உள்ள தூய மார்ட்டின் தொடக்கப்பள்ளி அருகில் கடந்த இரண்டு மாதங்களாக மங்களக்குறிச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு குடிநீர் செல்லும் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. பலமுறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி வருகிறது.
சாலையில் பள்ளம் ஏற்பட்டு தேங்கி கிடக்கும் தண்ணிரால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் ஒருவர் இந்த பள்ளத்தில் விழுந்து இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை கண்டித்து சாயர்புரம் சமூக ஆர்வலர் அமிர்தராஜ் தலைமையில் குழுவினர்கள் கப்பல் விட்டு நூதன போராட்டம் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குழாய் உடைப்பு தண்ணீரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா : 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்
செவ்வாய் 24, ஜூன் 2025 8:41:25 PM (IST)

நாசரேத் சாலமோன் பள்ளியில் முப்பெரும் விழா
செவ்வாய் 24, ஜூன் 2025 8:14:59 PM (IST)

தேவாலயத்தில் ஜாக்கி மூலம் கன்வென்சன் கூட்ட மேடை 3 அடி உயர்த்தும் பணி தொடக்கம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 8:02:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 7:57:27 PM (IST)

திருச்செந்தூர் குடமுழுக்கு விழா பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் : ஆட்சியர் அறிவுறுத்தல்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:50:26 PM (IST)

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம்
செவ்வாய் 24, ஜூன் 2025 5:33:09 PM (IST)
