» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மயானத்திற்கு செல்லும் பாதையில் பிரச்சனை : கோட்டாட்சியர் விசாரணை

சனி 24, மே 2025 10:21:19 AM (IST)



விளாத்திகுளம் அருகே இறந்தவரின் உடலை கொண்டு செல்லும் பாதை தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் ஒரு சமூகத்தினை சேர்ந்த 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த முத்துக்கனி என்ற மூதாட்டி என்பவர் கடந்த 7ந்தேதி உயிரிழந்தார். அப்போது தாங்கள் ஏற்கனவே சுடுகாட்டிற்கு வழக்கமாக இருக்கும் பாதை குறுகலாக இருப்பதாகவும், பேவர் பிளாக் பதிக்கப்பட்டதால் வாகனம் செல்ல முடியாத நிலை இருப்பதாக கூறி அந்த கிராமத்தில் கிறிஸ்துவ மக்கள் அதிகமாக வசிக்கும் கிழக்கு தெரு வழியாக உயிரிழந்த மூதாட்டி உடலை கொண்டு செல்ல முயன்றனர். 

இதற்கு கிழக்கு தெரு பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இருதரப்புக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையெடுத்து காவல்துறையினர் இருதரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அன்றைக்கு மட்டும் மூதாட்டி உடலை கிழக்கு தெருவழியாக கொண்டு செல்ல வேண்டும், இதன் பின்னர் வழக்கமாக கொண்டு செல்லக்கூடிய மாரியம்மன் கோவில் தெருவின் பாதைகளை சரி செய்து இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு மூதாட்டி உடல் மயானத்திற்கு கொண்டு செல்லபட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் இனிவரும் காலங்களில் கிறிஸ்துவ மக்கள் இருக்கும் கிழக்கு தெரு வழியாக தான் உடலை கொண்டு செல்வோம் என்று மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர்கள் அறிவித்துள்ளதால் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 20ந்தேதி இப்பிரச்சினை தொடர்பாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இப்பிரச்சினை தொடர்பாக சமதான கூட்டம் நடைபெற்றது. 

இதில் உடன்பாடு ஏற்படவில்லை இதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை இருப்பதாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அறிக்கை கொடுத்த காரணத்தினால் கோவில்பட்டி கோட்டாட்சியர் பாரதிய சுரக் சன்ஹிதா சட்டப்பிரிவு 126ன் கீழ் இருதரப்பினரும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதை தொடர்ந்து இருதரப்பினரும் இன்று கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு சார்பில் மனு அளித்தனர்.

மாரியம்மன் கோயில் தெரு கோயில் மக்கள் கிழக்குத் தெரு வழியாக தான் நடந்து செல்கின்றனர். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மயானத்திற்கு செல்வதற்கு ஏற்கனவே ஒரு பாதை இருக்கிறது‌ . அந்தப் பாதையைத்தான் பல ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வேண்டுமென்றே ஒரு நபர் தூண்டுதலின் பேரில் இந்த பாதை வழியாக தான் உடலைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 

எனவே எங்கள் தெரு வழியாக சடலத்தைக் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கிழக்குத் தெரு பகுதி மக்கள் கூறுகின்றனர். தாங்கள் ஏற்கனவே உடலை கொண்டு செல்லும் பாதையில் ஆக்ரமிப்புகள் உள்ளதால் அப்பாதையில் உடலை கொண்டு செல்ல வழியில்லை என்பதால் தான் கிழக்கு தெரு வழியாக உயிரிழந்தவர்களின் உடலை கொண்டு செல்ல கேட்பதாகவும், மதங்கள் வேறு என்பதால் கொண்டு செல்ல அனுமதிக்க மறுப்பதாக மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இரு தரப்பிடமும் உரிய விசாரணை நடத்திய பின்பு உடலை கொண்டு செல்லும் பாதையில் உள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital



New Shape Tailors



Thoothukudi Business Directory