» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவன் விஷம் குடித்து தற்கொலை
சனி 24, மே 2025 8:39:40 AM (IST)
சாத்தான்குளம் அருகே, நண்பர்களை விட்டு பிரிந்து வெளியூர் செல்ல விருப்பமின்றி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை புதுக்கிணறு கிராமத்தைச் சேர்ந்த முத்துகண்ணன், ஊரில் இருந்து விவசாயத்தை கவனித்து வந்த இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை கிடைத்து பார்த்து வருகிறார். . மனைவி பூர்ணிதேவி உள்ளிட்ட 3 மகள்கள் உள்ளூரில் இருந்து படித்து வந்தனர்.
முத்துக்கண்ணன் சென்னையில் இருந்ததால் அங்கேயே குடும்த்துடன் செல்ல இருந்ததாக தெரிகிறது. இதற்கு மூத்த மகன் இஷாந்த் (14) என்பவர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளுரிலேயே இருந்து பள்ளியில் படிக்க வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது. மேலும், இங்குள்ள பள்ளிக்கூடத்திலேயே படிப்பை ெதாடரவும், சக நண்பர்களை பிரிந்து செல்லவும் விருப்பம் இல்லை என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால் பெற்றோர் சென்னையில் படிக்க வேண்டும் என கூறியதால் விரக்தி அடைந்த மாணவன் இஷாந்த், வயலில் இருந்த கலைகொல்லி மருந்தை எடுத்து நேற்று காலை குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடன் உறவினர்கள் அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இஷாந்த் உயிரிழந்தார்.. இதுகுறித்த அவரது தாயார் பூர்ணிமா தேவி அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










